HMC

Thiruvengainathar Temple

Hindu temple in Pudukkottai

Updated: March 23, 2024 01:01 AM

Thiruvengainathar Temple is located in Pudukkottai (Town in India), India. It's address is CQ7F+QR3, Tamil Nadu 622005, India.

CQ7F+QR3, Tamil Nadu 622005, India

Questions & Answers


Where is Thiruvengainathar Temple?

Thiruvengainathar Temple is located at: CQ7F+QR3, Tamil Nadu 622005, India.

What are the coordinates of Thiruvengainathar Temple?

Coordinates: 10.4143856, 78.7745318

Thiruvengainathar Temple Reviews

Kumar Muthu
2021-03-07 12:26:34 GMT

Thiruvenkai vasal temple one of the big temple in pudukkottai. Nice location,family spending time place.parking available big.it located in pudukkottai to trichy highways.childrens spending space available.recently kumbabishagam done by local village.opening time every day morning 6 am to 12 pm and evening 4 pm to 8 pm

ram kumar
2021-07-09 14:01:24 GMT

Peaceful place to keep you in peace

Govind G
2022-02-16 09:44:31 GMT

Very peaceful and Divinely.

pradeeban p
2021-08-04 06:03:06 GMT

Peaceful palace

NATHEE
2023-10-28 17:06:13 GMT

முதலாம் இராஜராஜ சோழன் , இராஜேந்திர சோழன் , ராஜாதிராஜ சோழன் , விக்ரம சோழன் காலத்து கல்வெட்டுகளும், கோவிலுக்கு நடனமாடிய நாட்டியக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகளை குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன.

இங்குள்ள கட்டிடக்கலை மற்ற கோயில்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது மற்றும் தனித்துவமானது .

விநாயகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது ! கோவிலில் சிவன் எதிரில் மட்டுமல்ல, நவக்கிரகத்திற்குப் பதிலாக ஒன்பது விநாயகர் உள்ளனர்.

ஸ்தல விருட்சம் - வன்னி மரம் - 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

சூரியனின் கதிர்கள் தினமும் மாலை மூலவர் லிங்கத்தின் மீது விழுவதால் சூரியன் சிவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது .

கோயிலின் சரியான வயது கண்டறியப்படவில்லை, 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

RKS MURUGAN
2018-07-19 05:53:40 GMT

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்-622 002, புதுக்கோட்டை மாவட்டம்.

தல சிறப்பு: மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. இங்கு முருகன் தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார், 800 ஆண்டு பழமையான வன்னி மரம் உள்ளது. தலசிறப்பு : யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம்.

பொது தகவல்: வழிபாட்டு முறைகளில் அகவழிபாடு, புறவழிபாடு ஆகியவை பின்பற்றப்படுகின்றன. முதலில் மூலவரை வழிபட்டு பின் பரிவார தெய்வங்களை வணங்குவது அக வழிபாடாகும். மற்ற தெய்வங்களை வழிபட்ட பிறகு மூலவர் சன்னதி வருவது புற வழிபாடாகும். இங்கு புறவழிபாடு முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் வியாக்ரபுரீஸ்வரரை வழிபாடு செய்யும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை: தவக்கோல முருகன்: கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.

சுவாமி எதிரே கணபதி: எங்குமில்லாத சிறப்பாக சிவனின் மூலஸ்தானத்திற்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.

மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடப்பதை காண கண்கோடி வேண்டும். இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.

எதிரெதிர் சன்னதி: இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

தல வரலாறு: ஒருமுறை காமதேனு இந்திர சபைக்கு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய் என சாபமிட்டான். வருத்தமடைந்த காமதேனு பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு ஆலோசனை கேட்டது. அதற்கு அவர், இங்கு சுயம்புமூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு உனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும், என்றார்.

பசுவும் முனிவரின் உபதேசப்படி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டது. ஒருநாள் சிவன் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார். பசு அபிஷேகத்திற்கு வரும் போது புலி வடிவெடுத்த சிவன், உன்னை கொன்று பசியாறப் போகிறேன், என்றார். அதற்கு பசு, நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன்.

பூஜையை முடித்து விட்டு நானே உன்னை தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம், என்றது. இதைக்கேட்ட புலி வழிவிட்டது. பசுவும் சிவபூஜையை முடித்து விட்டு நேராக புலியிடம் வந்து, இப்போது நீ என்னை சாப்பிடலாம், என்றது. புலி வடிவிலிருந்த சிவன், பசு மீது பாய்வது போல் சென்று, ரிஷப வாகனத்தின் மீது உமா தேவியருடன் காட்சி கொடுத்து, சாப விமோசனமும் தந்தார். அத்துடன் வேண்டும் வரம் கேள் என்றார்.

அதற்கு பசு, இறைவா! நீங்கள் எனக்கு அருள்பாலித்தது போல் இங்கு வந்து தங்களை வழிபாடு செய்பவர்களின் குறையை போக்க வேண்டும். அத்துடன் புலி வடிவில் வந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என வேண்டியது. "வியாக்ரம்' என்றால் "புலி' எனப் பொருள்.

arun kumar
2022-09-03 14:06:55 GMT

Kattu veera anjineyar temple

NATHAN SRI
2021-02-04 06:29:21 GMT

அதிக சக்தி சிவன் கோயில்

Ennaa Thala Sekar
2019-07-25 08:49:52 GMT

It's my village da

பாலச்சந்திரன்
2021-06-08 12:49:32 GMT

திருவேங்கைவாசல் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில். தஞ்சை சாலையும் திருச்சி சாலை பிரியுமிடத்தில் வலது புறமாக செல்ல வேண்டும். கல் வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். கோயிலின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும். கோயிலின் தென்புறம் தடாகம் உள்ளது. புதுப்பிப்புகளால் சில செயற்கைத் தனங்கள் இருந்தபோதும். அமைதியான ஆலையம்.

Vadivelan P
2023-06-29 13:13:23 GMT

அருமையான கோயில்

Write a review of Thiruvengainathar Temple


Thiruvengainathar Temple Directions
About Pudukkottai
Town in India

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the Indian state of Tamil Nadu. It is a town located on the banks of the Vellar River. source

Top Rated Addresses in Pudukkottai

Addresses Near Pudukkottai