HMC

Arulmigu Sri Perumal Temple

Hindu temple in Chengalpattu

Updated: May 17, 2024 10:45 PM

Arulmigu Sri Perumal Temple is located in Chengalpattu (City in India), India. It's address is M259+M85, Thunjam Main Rd, Nenmeli, Chengalpattu, Tamil Nadu 603003, India.

M259+M85, Thunjam Main Rd, Nenmeli, Chengalpattu, Tamil Nadu 603003, India

+91 1800 4253 1111

Questions & Answers


Where is Arulmigu Sri Perumal Temple?

Arulmigu Sri Perumal Temple is located at: M259+M85, Thunjam Main Rd, Nenmeli, Chengalpattu, Tamil Nadu 603003, India.

What is the phone number of Arulmigu Sri Perumal Temple?

You can try to calling this number: +91 1800 4253 1111

What are the coordinates of Arulmigu Sri Perumal Temple?

Coordinates: 12.6591383, 80.0183657

Arulmigu Sri Perumal Temple Reviews

Girish Sp
2024-04-05 02:13:33 GMT

Not the temple its place for doing sharda to ancestors only. The shrine is inside sharda center but it's not for common people/ podumakkal

Revathy P
2021-09-13 16:01:42 GMT

Good temple with peaceful environment...I like and love this temple...bcoz if u go and do the tharpanam here, u will feel free and get ur ancestors blessings

Mathi Yazhagan
2022-03-27 20:09:10 GMT

Excellent💯

suresh kumar
2023-06-11 06:36:35 GMT

Superb temple

True Indian
2023-01-09 08:46:28 GMT

Nice temple

VISWANATHAN RAMAKRISHNAN WEST MAMBALAM
2022-05-09 06:47:42 GMT

Good

Vijay Anand
2021-01-24 10:39:36 GMT

Good temple

M. Dhanapal
2023-04-30 08:50:34 GMT

Divine place

S. ALAGURAJ
2024-03-28 02:41:38 GMT

இந்தக் கோவிலில் பித்ரு தோசை பரிகாரம் செய்வதால் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் திருமண தடை புத்திர தோஷம் பூர்வீக புண்ணிய சம்பந்தப்பட்ட தோஷம் அனைத்தும் விலகுகிறது இது என்னுடைய அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன் நான் தொழிலில் ஒரு ஜோதிடராக இருந்து பல ஜாதகர்களை அங்கு அனுப்பி பரிகாரம் செய்ய சொல்லியுள்ளேன் அவ்வாறு செய்தவர்கள் அனைவரும் எந்த காரணத்திற்காக பரிகாரம் செய்யச் சொன்னேனோ அந்த காரியம் விரைவாக மன சந்தோஷத்திலும் நிறைவேறி உள்ளதாக என்னிடம் கூறுகின்றனர். நானும் ஒரு தடவை பித்ரு தோச பரிகாரம் அங்கே செய்துள்ளேன்

நண்பர்களுக்காக பல தடவை அங்கே சென்றுள்ளேன் ஆனாலும் அவர்கள் கோவிலில் தோஷ பரிகாரம் செய்வதை தவிர மற்றவர்களை அனுமதிப்பதில்லை மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் ஒரு கோவில்.

ragavan sv
2024-03-20 13:16:34 GMT

முன்னோர்கள் ஸ்ரார்த்தம் செய்யாத தோஷம் நிவர்த்தி தலம்
செங்கல்பட்டு மிக அருகில்
அதிக பணம் கேட்பது இல்லை
தட்சணை நமது விருப்பம்

Kayal Prabhu
2020-06-21 02:57:41 GMT

படித்ததில் பிடித்தது 🙏🌹🙏

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா?

பித்ரு கடன் செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்?

மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி கொடுப்பது?
தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள்.

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக் ஆலயத்தின் பெருமாளின் மீது, அதீத பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு செலவு செய்து விட்டனர்.

இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் இறந்தனர். ஆனால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா?

திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதிசெய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தினமும், பகல், 12 மணி முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது
இந்த ஒரு காலம் மட்டும், ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்.

எனவே, இங்கு திதி செய்ய விரும்புபவர்கள், பித்ரு காலத்தில் நடக்கும் பூஜையில், தங்கள் முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, பெருமாளிடம் சுவாமியிடம் சமர்ப்பிப்பதே, திதி சம்ரட்சணம்.
பெருமாளுக்கு, வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா?

அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ, ஆலயத்தில் பித்ரு கால பூஜையில் கலந்து கொண்டால், கயாவில் சென்று திதி கொடுத்த பலனைக் கொடுக்கும் .
திதிகொடுக்க விரும்புபவர்கள், காலை, 11 மணிக்குள் ஆலயத்துக்கு வர வேண்டும். மஞ்கள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், தாம்பூலம், பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்பித்து, தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பின், விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில், திதி செய்பவர், தங்கள் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து, பெருமாளிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிப்பதே, திதி சம்ரட்சணமாகும்.

பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. ஜான் ஏறினால், முழம் சறுக்கும் என்பதாகவே இருக்கும்.
பித்ரு தோஷம் நீங்க, இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு கால பூஜையில் பங்கேற்க வேண்டும்.

மஹாலய பட்ச காலத்தில், இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு பூஜையில் பங்கேற்றால், முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அதனால், நமக்கு பித்ருகளின் முழுமையான அருளும் கிடைக்கும்.

Write a review of Arulmigu Sri Perumal Temple


Arulmigu Sri Perumal Temple Directions
About Chengalpattu
City in India

Chengalpattu, previously known as Chingleput, is a city and the headquarters of Chengalpattu district of the state Tamil Nadu, India. The town is located near to the industrial and IT hub. source

Top Rated Addresses in Chengalpattu